முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகள்: தலைமை நீதிபதி புதிய உத்தரவு

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகள்: தலைமை நீதிபதி புதிய உத்தரவு
Published on

புதுடெல்லி,

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை நீதிபதி ஏ.எம்.கான்வேகர் விசாரித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்த வழக்குகளை மீண்டும் அவசரமாக விசாரிக்கக்கோரி மனுதாரர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன் நேற்று முறையிடப்பட்டது.

அப்போது இது தொடர்பான் ஆவணங்களை அளித்தால், விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதாக நீதிபதி தெரிவித்தார். இந்த நிலையில், இது தொடர்பான உத்தரவு இன்று வெளியாகி உள்ளது.

அதில், இனி முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட பதிவாளர் அலுவலகத்திற்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com