முல்லைப்பெரியாறு விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கு ஏப்ரல் 28-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

சுப்ரீம் கோர்ட்டு, முல்லைப் பெரியாறு அணை வாகன நிறுத்துமிடத்தை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
புதுடெல்லி,
முல்லைப்பெரியாறு அணை அருகே, படகு சவாரி செய்ய தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு குமுளி அருகே உள்ள ஆனவாசல் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்த மையம் அமைக்க திட்டமிட்டு உள்ள கேரள வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, மேலும் 2 சாட்சியங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதையேற்ற சுப்ரீம் கோர்ட்டு, முல்லைப் பெரியாறு அணை வாகன நிறுத்துமிடத்தை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
Related Tags :
Next Story






