காவலர் பணிக்கான தேர்வு: 1,600 மீ ஓட்டத்தில் பங்கேற்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

மும்பையில் போலீஸ் டிரைவர் பணிக்கான ஆட்சேர்ப்பின் 1,600 மீ ஓட்டத்தில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
காவலர் பணிக்கான தேர்வு: 1,600 மீ ஓட்டத்தில் பங்கேற்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
Published on

மும்பை,

மும்பையில் நடைபெற்ற போலீஸ் டிரைவர் பணிக்கான ஆட்சேர்ப்பு தேர்வில், 1,600 மீ ஓட்டத்தில் பங்கேற்ற 26 வயது இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கலினா பல்கலைக்கழக கோல்கல்யான் மைதானத்தில் இன்று காலையில் போலீஸ் டிரைவர் பணிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றது. இந்த தேர்வில் கணேஷ் உத்தம் உகலே என்ற நபர் பங்கேற்றார். இந்த நிலையில் 1600 மீட்டர் தூர ஓட்டத்தில் கலந்து கொண்ட அவர், ஓட்டத்தை முடிப்பதற்குள்ளாகவே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் இறப்புக்கான காரணம் இதவரை கண்டறியப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com