மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 2027 பயன்பாட்டிற்கு வரும் - ரெயில்வே மந்திரி

இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் சேவை வரும் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 2027 பயன்பாட்டிற்கு வரும் - ரெயில்வே மந்திரி
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றாக புல்லெட் ரெயில் திட்டம் உள்ளது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் புல்லெட் ரயில் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தபுல்லெட் ரயில் திட்டம் பற்றி பேசிய மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், வரும் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி புல்லட் ரயில் சேவை நடைமுறைக்கு வரும் என்றார்..

முதல் பகுதியாக, சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். அதன் பிறகு, வாபி முதல் சூரத் வரை விரிவாக்கம் செய்யப்படும். தொடர்ந்து வாபி முதல் அகமதாபாத் வரையிலும், படிப்படியாக தானே முதல் அகமதாபாத் வரையிலும், மும்பை முதல் அகமதாபாத் வரையிலும் என புல்லட் ரயில் சேவை தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

508 கிலோ மீட்டர் தொலைவுக்கு மும்பை முதல் அகமதாபாத் வரை அமைக்கப்பட்டு வரும் அதி விரைவு ரயில் சேவையான புல்லட் ரயிலுக்கான கட்டமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேம்பாலங்கள், சுரங்கங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியும் துரிதமாக நடக்கிறது.இந்த ரயில் சேவை தொடங்கியதும், ரயில்கள் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். இதனால் பயண நேரம் 2 மணி நேரங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com