மும்பை தாக்குதல் வழக்கு; ராணாவுக்கு 12 நாட்கள் காவல் நீட்டிப்பு

மும்பை தாக்குதல் வழக்கில் ராணாவுக்கு 12 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர், மும்பையில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் 166 பேர் பலியானார்கள். அந்த வழக்கில் தேடப்பட்டு வந்த தஹாவுர் ராணா சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். அவர் 18 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.
காவல் முடிந்தநிலையில், நேற்று டெல்லி என்.ஜ.ஏ. கோர்ட்டில், முகத்தை மூடியபடி, பலத்த காவலுடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் ஆதாரங்களை காண்பித்து விசாரிக்க வேண்டி இருப்பதால், காவலை நீட்டிக்குமாறு என்.ஐ.ஏ. கேட்டுக்கொண்டது. அதை ஏற்று, 12 நாட்கள் காவலை நீட்டித்து, நீதிபதி சந்தர் ஜித் சிங் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story






