மேற்கு வங்கம் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்

மேற்கு வங்கம் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.
மேற்கு வங்கம் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்
Published on

கொல்கத்தா, 

மேற்கு வங்கம் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.மேற்குவங்க மாநிலம் சாலிமாரில் இருந்து மும்பையில் உள்ள லோக்மான்யா திலக் டெர்மினசுக்கு (எல்.டி.டி.) எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:18030) வந்து கொண்டு இருந்தது.

இந்த ரெயில் இன்று காலை 8.43 மணிக்கு நாசிக் ரோடு ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரெயிலின் பார்சல் வேன் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் சுமார் 45 நிமிடத்தில் தீயை அணைத்தனர். பார்சல் பெட்டியில் எரிந்த தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com