பணம் கேட்டு மிரட்டியதாக தாவூத் இப்ராகிம் மீது பெண் தொழில் அதிபர் புகார் போலீஸ் வழக்குப்பதிவு

பணம் கேட்டு மிரட்டியதாக தாவூத் இப்ராகிம் மீது பெண் தொழில் அதிபர் அளித்த புகார் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது.
பணம் கேட்டு மிரட்டியதாக தாவூத் இப்ராகிம் மீது பெண் தொழில் அதிபர் புகார் போலீஸ் வழக்குப்பதிவு
Published on

மும்பை,

இந்தியாவில் நடைபெற்ற 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதன்பேரில் பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்த நாடு தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என உறுதிபட மறுத்து வருகிறது.

உலக அளவில் 2வது மிகப்பெரும் கோடீஸ்வர குற்றவாளியான தாவூத் இப்ராகிமை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்து உள்ளது.

இந்நிலையில் ரூ.1 கோடி கேட்டு தாவூத் இப்ராகிம், சோட்டா சகில் ஆகியோர் தன்னை மிரட்டியதாக ஆயத்த ஆடை நிறுவனம் நடத்திவரும் பெண் தொழில் அதிபர் சப்னம் சேக் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அண்மையில் சப்னம் சேக் செல்போனுக்கு பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அழைப்பு வந்து உள்ளது. உஸ்மான் சவுத்ரி என அறிமுகம் செய்து கொண்டு அதில் பேசி நபர், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா சகில் ஆகியோர் சார்பில் பேசுவதாக கூறியுள்ளார். பின்னர் அவர் சப்னம் சேக்கிடம் ரூ.1 கோடி தரவேண்டும். இல்லையெனில் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி உள்ளார்.

இதன்பின்னர் அவருக்கு 7 வெவ்வேறு எண்களில் இருந்து பணம்கேட்டு இதுபோன்று மிரட்டல் அழைப்புகள் வந்து உள்ளன.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் சப்னம் சேக், இது குறித்து கார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் விசாரணையை போலீசார் குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com