நடிகை கங்கனா ரணாவத் மனு தள்ளுபடி

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவை அடுத்து நடிகை கங்கனா ரணாவத், இந்தி திரையுலக பிரபலங்கள் மீது பல பரபரப்பு புகார்களை கூறியிருந்தார்.
நடிகை கங்கனா ரணாவத் மனு தள்ளுபடி
Published on

மேலும் பேட்டி ஒன்றில் பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியா ஜாவித் அக்தர் குறித்தும் அவதூறு கருத்தை கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கங்கனா ரணாவத் மீது அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாவித் அக்தர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், விசாரணையை வேறு கோட்டுக்கு மாற்ற வலியுறுத்தி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில் அவர், நான் நேரில் ஆஜராக தவறினால் வாரண்டு பிறப்பிக்கப்படும் என மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எனக்கு மிரட்டல் விடுத்தது. எனவே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். எனவே வழக்கு விசாரணையை வேறு கோர்ட்டிற்கு மாற்றவேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாவேத் அக்தர் தரப்பு இந்த மனு விசாரணைக்கு தகுதியற்றது என கூறியதுடன், விசாரணையை தாமதப்படுத்த மட்டுமே இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட கோர்ட்டு, கங்கனா ரணாவத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com