கொரோனா பாதிப்பு அதிகரிப்பு...மும்பை மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு

மும்பையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய அறிவுறுத்துகிறோம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு...மும்பை மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு
Published on

மும்பை,

மும்பை உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நற்று முன் தினம் மாநிலத்தில் 788 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தலைநகர் மும்பையில் புதிதாக 221 போ வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 600 ஆகவும், மும்பையில் 1,434 ஆகவும் அதிகரித்து உள்ளது. மராட்டியம் மட்டுமின்றி நாடு முழுவதும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் மும்பையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய அறிவுறுத்துகிறோம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் , மும்பை மாநகராட்சி ஊழியர்களும் அலுவலகம், பொது இடங்களில் முககவசம் அணிய அறிவுறுத்துகிறோம். மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். மும்பையில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை மேற்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும்" என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com