மும்பையில் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பு

மும்பையில் புதிதாக 1,240 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு படிப்படியாக குறைவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
மும்பையில் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பு
Published on

மராட்டிய தலைநகர் மும்பையில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தற்போது நகரில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதில் நேற்று புதிதாக 1,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 89 ஆயிரத்து 936 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 6 லட்சத்து 39 ஆயிரத்து 340 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 34 ஆயிரத்து 288 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நகரில் மேலும் 48 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 14 ஆயிரத்து 308 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பாதித்தவர்களில் 93 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 246 நாட்களாக உள்ளது. தற்போது நகரில் 77 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 311 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com