மும்பை தாதா ரவி புஜாரி கைது

மும்பை தாதா ரவி புஜாரி கைது செய்யப்பட்டார்.
மும்பை தாதா ரவி புஜாரி கைது
Published on

மும்பை,

மும்பையை கலக்கிய பிரபல தாதா ரவி புஜாரி. இவர், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் இணைந்து சில காலம் செயல்பட்டார். பின்னர், சோட்டா ராஜனிடம் இருந்து பிரிந்து தாதாவாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

கட்டுமான அதிபர்கள், சினிமா பிரபலங்களை மிரட்டி பணம் பறித்து வந்தார். வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த அவர், கூட்டாளிகள் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் நாடு முழுவதும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தி சினிமா இயக்குனர் மகேஷ் பட் தனக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மும்பை போலீசில் புகார் அளித்தார்.

இது சம்பந்தமாக, ரவி புஜாரியின் கூட்டாளிகளான வில்லியம் ரோட்ரிக்ஸ், ஆகாஷ் ஷெட்டி ஆகியோரை சமீபத்தில் மும்பை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து, தாதா ரவி புஜாரி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் பிடிபட்டு உள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டலில் அவரை அந்நாட்டு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை நாடு கடத்தி வர இந்திய தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com