மும்பை தாராவியில் மேலும் 67- பேருக்கு கொரோனா

மும்பை தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் 67- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மும்பை தாராவியில் மேலும் 67- பேருக்கு கொரோனா
Published on

மும்பை,

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. மராட்டியத்தில் மட்டும் கடந்த சில தினங்களாக 60- ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா நோய் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. தாராவியில் இன்று ஒரே நாளில் புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,999- ஆக உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com