

மும்பை,
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,427 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று ஒரே நாளில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒருவர் இன்று அங்கு உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.