மும்பை; வணிக மையத்தில் பயங்கர தீ விபத்து- மீட்பு பணிகள் தீவிரம்


மும்பை; வணிக மையத்தில் பயங்கர தீ விபத்து-  மீட்பு பணிகள் தீவிரம்
x

தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

மும்பை,

மும்பை ஜோகேஷ்வரி மேற்கு பகுதியில் உள்ள வணிக மையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தின் மேல்தளத்தில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல காட்சியளிக்கிறது.

1 More update

Next Story