மும்பை: விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பயணியிடம் நடத்திய விசாரணையில், அவர் டெல்லியைச் சேர்ந்த பால் தாரி மான் என்பது தெரியவந்தது.
கஞ்சா பறிமுதல்
Published on

மும்பை,

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சம்பவத்தன்று மும்பைக்கு விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவரின் டிராலி பேக்கில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது அதில் இருந்து 3 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது.

கைது

சோதனையில் அது உயர் ரக கஞ்சா என்பது தெரியவந்தது. அதிகாரிகள் பயணி கடத்தி வந்த ரூ.2.27 கோடி மதிப்பிலான 2 கிலோ 272 கிராம் உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தி வந்த பயணியை கைது செய்தனர். விசாரணையில் அவர் டெல்லியை சேர்ந்த பால் தாரி மான் (வயது 42) என்பது தெரியவந்தது. கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து சுங்க அதிகாரிகள் பிடிபட்ட பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com