மும்பை, கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மும்பை உள்ளிட்ட கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மும்பை, கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on

மும்பை,

மும்பையில் நேற்று மழை கொட்டித்தீர்த்த பருவமழையால் மும்பை வெள்ளக்காடாக மாறியது. மழைநீரில் பஸ், ரெயில்கள் சிக்கியதால் நடுவழியில் நின்றன. வெளுத்து வாங்கிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை உள்ளிட்ட கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் அங்கு 4 நாட்களும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ராய்காட்டில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் புனே, சத்தாரா, கோலாப்பூரில் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ய இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com