திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்

திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த தொலைக்காட்சி நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்
திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்
Published on

மீரட்:

தொலைக்காட்சி நடிகை மால்வி மல்கோத்ரா அந்தேரியின் வெர்சோவா பகுதியில் நேற்று இரவு ஒரு ஓட்டலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை சந்தித்த தயாரிப்பாளர் யோகேஷ் மகிபால் சிங் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி உள்ளார். நடிகை மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகிபால் சிங் மரைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்துநடிகையைசர்மாறியாக குத்தி உள்ளார்.

மிகவும் ஆபத்தான நிலையில் நடிகை மல்கோத்ரா சிகிச்சைக்காக மும்பையின் கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர் என்று கூறப்படும் மகிபால் சிங்கை நடிகை நன்கு அறிந்து உள்ளார். 2019 ஆம் ஆண்டு சமூக ஊடகம் மூலம் இருவரும் பழக்கமாகி உள்ளனர்.மகிபால் மல்கோத்ராவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வலியுறுத்தி வந்து உள்ளார்.

சமீபத்தில் நடிகை குற்றம் சாட்டப்பட்டவருடன் அனைத்து வகையான தகவல்தொடர்புகளையும் துண்டித்து கொண்டார்.

மகிபால் சிங்கிற்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com