

பெங்களூரு:-
இதுகுறித்து பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. முனிரத்னா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரசுக்கு போக மாட்டேன்
எனது தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெற வேண்டும். இதற்காக நான் 5 ஆண்டுகளும் சிறையில் இருக்கவும் தயார். ராஜினாமா கொடுத்தால் வளர்ச்சி பணிகள் செய்வதாக இருந்தால் அந்த பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் காங்கிரசில் மட்டும் சேர மாட்டேன். அங்கிருந்து வந்த 17 பேரில் யார் காங்கிரசில் சேருகிறார்கள் எனக்கு தெரியாது. ஆனால் பா.ஜனதாவை விட்டு விலக மாட்டேன்.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேனே தவிர காங்கிரசுக்கு போக மாட்டேன். எனக்கு காங்கிரஸ் அவசியம் இல்லை. நான் டி.கே.சிவக்குமாரை சந்திக்கவில்லை. அவரது வீட்டிற்கு யார் சென்றனர்?. யாராவது திருட்டுத்தனமாக சென்றனரா?. நான் எனது தொகுதி வளர்ச்சி குறித்து அவரிடம் பேசினேன். இதை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தி கொள்வது நல்லது.
பா.ஜனதா மீது நம்பிக்கை
தனிப்பட்ட முறையில் டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுடன் எனக்கு எந்த பகையும் இல்லை. அதிகாரத்திற்காக நான் கட்சி மாற மாட்டேன். பா.ஜனதாவிலேயே நீடிப்பேன். பா.ஜனதாவில் என்னை கவுரமாக நடத்துகிறார்கள். டி.கே.சிவக்குமார் எனக்கு 40 ஆண்டுகளாக நண்பர். எனக்கு அரசியல் குரு பி.கே.ஹரிபிரசாத். பா.ஜனதா மீது நம்பிக்கை, மரியாதை உள்ளது.
இந்த ஆட்சி எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது எனக்கு தெரியாது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ஆவது நிதி கொடுக்கட்டும்.
இவ்வாறு முனிரத்னா எம்.எல்.ஏ. கூறினார்.