சண்டையை விலக்கி விட சென்றவர் குத்திக் கொலை

யாதகிரியில் சண்டையை விலக்கி விட சென்றவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
சண்டையை விலக்கி விட சென்றவர் குத்திக் கொலை
Published on

யாதகிரி:

யாதகிரி (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 44). இவர், நேற்று முன்தினம் யாதகிரி-ஐதராபாத் ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது வாகனம் நிறுத்தும் விவகாரம் தொடர்பாக அந்த ஓட்டலில் வேலை செய்யும் தொழிலாளிக்கும், மற்றொரு நபருக்கும் சண்டை நடந்தது. இதை பார்த்த சீனிவாஸ் சண்டையை விலக்கி விட சென்றார். அபபோது திடீரென்று சீனிவாசுக்கும், ஓட்டல் தொழிலாளிக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஓட்டல் ஊழியர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்.

இதில், வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பின்னர் அங்கேயே சீனிவாஸ் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் யாதகிரி டவுன் போலீசார் விரைந்து வந்து சீனிவாஸ் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சண்டையை விலக்கி விட சென்ற விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரிந்தது. அதே நேரத்தில் ஓட்டல் தொழிலாளியுடன், சீனிவாசுக்கு முன்விரோதம் இருந்ததா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து யாதகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் தொழிலாளி சேகரை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com