பாஜகவை வளர்க்க 30 காஷ்மீர்முஸ்லிம் இளைஞர்கள் உதவப்போகிறார்கள் - அமித் ஷா

காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவை வளர்க்க 30 காஷ்மீர் இளைஞர்கள் முன் வந்துள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.
பாஜகவை வளர்க்க 30 காஷ்மீர்முஸ்லிம் இளைஞர்கள் உதவப்போகிறார்கள் - அமித் ஷா
Published on

ஜம்மு

ஜம்முவில் கட்சியினர் மத்தியில் பேசுகையில் அமித் ஷா இத்தகவலை வெளியிட்டார். ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. சமீபக் காலங்களில் அக்கூட்டணியில் சில பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் அமித் ஷாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அமித் ஷா நாடு முழுவதும் கட்சியை வாக்குச்சாவடி அளவில் பலப்படுத்தும் நோக்கத்தில் செய்யும் 95 நாள் சுற்றுப்பயணத்தின் கீழ் இம்மாநிலத்திற்கு வந்துள்ளார்.

இப்புதிய போக்கு குறித்து கட்சி வட்டாரங்கள் குறிப்பிடும் போது, நாடு முழுதும் கட்சியை விரிவாக்கம் செய்ய முயற்சிகள் செய்யப்படும் வேளையில் கட்சி பலவீனமாக இருப்பதாக கருதப்படும் ஒரு மாநிலத்தில் இப்படியொரு முன்னேற்றம் வந்துள்ளது ஊக்கமளிப்பதாக உள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com