அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதம் - பூட்டை உடைத்து ராமர் சிலை நிறுவப்பட்டது

பூட்டை உடைத்து ராமர் சிலை நிறுவப்பட்டதாக அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதம் செய்தது.
அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதம் - பூட்டை உடைத்து ராமர் சிலை நிறுவப்பட்டது
Published on

புதுடெல்லி,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று 18-வது நாளாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடைபெற்றது. முஸ்லிம் அமைப்புகள் தரப்பு மூத்த வக்கீல் ராஜீவ் தவன் நேற்றும் தனது வாதத்தை தொடர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த வழக்கில் நிர்மோகி அகாரா தரப்பின் நிலை எப்போதும் முரண்பாடானதாக உள்ளது. சர்ச்சைக்குரிய நிலம் 300 வருடங்களாக தங்களிடம் உள்ளது, 200 வருடங்கள், 150 ஆண்டுகளுக்கு மேலாக என்று ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு தகவலை கூறுகிறது. மசூதியை இடித்தவர்கள் தீயவர்கள் என்றும் இந்துக்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் கூறியுள்ளது. 1949-ம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23-ந்தேதிகளில் அந்த மசூதியின் பூட்டை உடைத்து முற்றத்தில் ராமர் சிலை நிறுவப்பட்டது. இது வஞ்சகமான தாக்குதல். முற்றத்துக்கு வெளியில் உள்ள பகுதி தான் நிர்மோகி அகாராவின் வசம் இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார். இன்றும் (புதன்கிழமை) அவர் தனது வாதத்தை தொடருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com