இந்தியாவில் முஸ்லீம்கள் அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்தியாவில் முஸ்லீம்கள் அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முஸ்லீம்கள் அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
Published on

மும்பை,

இந்துக்களுக்கும் முஸ்லீம்களும் ஒரே வம்சாவளியினர் தான் என்று தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்திய குடிமக்கள் அனைவரும் இந்து எனக்குறிப்பிட்டுள்ளார். புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பகவத் மேலும் கூறியதாவது;-

இந்து என்ற சொல் தாய்நாடு, முன்னோர்கள் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு சமமானது. ஊடுருவல்காரர்கள் மூலமாகவே இஸ்லாம் இந்தியாவுக்கு வந்தது. இது வரலாறு எனவே, அந்த வகையில் தான் இதை கூறவேண்டும். நல்ல முஸ்லீம் தலைவர்கள் தேவையற்ற விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அடிப்படைவாதிகள் மற்றும் கடும் போக்காளர்களுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும். இதை நாம் எவ்வளவு சீக்கிரம் செய்கிறோமோ அந்த அளவு சமூகத்தில் குறைவான சேதத்தை ஏற்படுத்தும்.

இந்து என்பது எந்த இனம், மதம் அல்லது மொழி அடையாளத்தைக் குறிக்கும் சொல் அல்ல. இந்து என்பது அனைத்து தரப்பினரின் உயர்வுக்காக பாடுபடும் ஒரு வளமான பாரம்பரிய பெயர் ஆகும். ஆகவே, எங்களை பொருத்தவரை ஒவ்வொரு இந்தியனும் இந்துதான்.

நாங்கள் ஒன்றல்ல. தனித்தனியானவர்கள் என நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறவர்கள் கூற முயற்சிக்கின்றனர். இதற்கு ஒருவரும் இரையாகக் கூடாது. நாம் ஒரே நாடு. ஒருநாடாக நாம் எப்போதும் ஒன்றுபட்டு இருப்போம். ஆர்எஸ்எஸ்ஸில் நாங்கள் இதைத்தான் நினைக்கிறோம், இதை உங்களுக்கு தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com