முசாபர்பூர் காப்பக பாலியல் வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 19 பேர் குற்றவாளிகள் - டெல்லி கோர்ட்டு தீர்ப்பு

முசாபர்பூர் காப்பக பாலியல் வழக்கு தொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 19 பேர் குற்றவாளிகள் என டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
முசாபர்பூர் காப்பக பாலியல் வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 19 பேர் குற்றவாளிகள் - டெல்லி கோர்ட்டு தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

பீகார் மாநிலம் முசாபர்பூரில் பெண்கள் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. பீகார் மக்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பிரஜேஷ் தாக்குர், இதை நடத்தி வருகிறார். அங்குள்ள சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதாக, கடந்த 2018-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது. பிரஜேஷ் தாக்குர் உள்பட 12 ஆண்கள், 8 பெண்கள் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லி கூடுதல் அமர்வு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில், பிரஜேஷ் தாக்குர் உள்பட 19 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி சவுரவ் குல்ஷ்ரேஷ்டா தீர்ப்பு அளித்தார். ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com