எனது இனிய நண்பர் கேப்டன்..பிரதமர் மோடி தமிழில் எக்ஸ் பதிவு

சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
FILEPIC
FILEPIC
Published on

புதுடெல்லி,

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக பாஜக கூட்டணி இருந்த நிலையில் அதற்கு பிறகு தேமுதிக பாஜகவில் இருந்து விலகி மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கைகோர்த்தது. தற்போது பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் தேமுதிகவும் அதில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் விஜயகாந்துக்கும் இருந்த உறவு குறித்து நெகழ்ச்சியுடன் பேசி இருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மோடி ஸ்டோரி என்ற சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. 'தமிழகத்தின் சிங்கம்' என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று என்று கூறி இருந்தார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில்,

நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com