

புதுடெல்லி,
சோனியா காந்திக்கு மிகவும் பிடித்த பெங்காலி, குஜராத்தி வகை உணவுகள் என நினைவு குறிப்பில் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு வந்த புதிதில் மசாலா வாசனையைக் கூட விரும்பாதவராக இருந்த சோனியா காந்தி, தற்போது இந்திய உணவு வகைகள் மீது மிகுந்த விருப் பம்கொண்டவராகமாறியுள்ளார். குறிப்பாக, பெங்காலி, குஜராத்தி உணவு வகைகள் தனக்குப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ள அவர், கபாப்,சிக்கன்டிக்கா,தந்தூரி சிக்கன்,தால் மக்கானி, காஷ்மீரி கோப்தா உள்ளிட்ட உணவு வகைகளையும் விரும்பிச் சாப்பிடுவதாகக் கூறியுள்ளார். அதிலும், தனது வீட்டில் தினமும் ஒரே வகையான துவரம் பருப்பு சாதம்தான் சமைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி, தனது புதிய சுயசரிதையான பிளாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இதை யொட்டி ஹார்ப்பர்கா லின்ஸ் பதிப்பகத்துக்கு அளித்த பேட்டியில் தனது உணவுப் பழக்கங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
மேலும், மகள் பிரியங்கா காந்தி, பேத்தி மிராயா ஆகியோருடன் உணவு தொடர் பாகப் பேசிய காணொளி யையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்த புதிதில் இந்திய உணவுகளை ஏற்றுக்கொள்வது எனக்குசிரமமாக
இருந்தது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் இருந்த போது, கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வந்த உணவகத்தைக்கடந்து செல்லும்போது கூட மசாலா வாசனை மூச்சை அடக்கிக்கொண்டு பிடிக்காமல் சென்றிருக்கிறேன்.
லண்டனில் முதன்முதலாக தந்தூரி சிக்கன்சாப்பிட்டபோது,அதன் காரத்தால் வாய் எரிந்து விட்டது போலானது. பின்னர் ராஜீவ் காந்தி, சார்லோட் தெருவில் உள்ள வட மேற்கு இந்திய உணவுகள் தயாரிக்கும் உணவகத்துக்கு அழைத்துச் சென்றார். அதைத் தொடர்ந்து, தந்தூரி உணவுகள் எனக்குப் பிடித்த மானதாக மாறிப் போனது. இந்தியாவுக்கு வந்தபோது எனக்குச் சமைக்கத் தெரியாது, பின்னர் படிப்படியாக சமைக்கக்கற்றுக்கொண்டேன்.
பெங்காலி இப்போது உணவுகள், குறிப்பாக சூரத் பகுதியின் குஜராத்தி உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். கபாப், சிக்கன் டிக்கா, தந்தூரி சிக்கன், தால் மக் கானி, காஷ்மீரி கோப்தா, காஷ்மீரி கீரை உணவான 'ஹாக்' ஆகியவையும் எனக் குப் பிடித்த உணவுகளாக உள்ளன.
எனது வீட்டில் நான் வந்த நாள் முதல் இன்று வரை துவரம் பருப்பு மட்டுமே சமைக்கப்படுகிறது. வேறு எந்தப் பருப்பும் சமைப்பதில்லை; எனது மகள் பிரியங்காதான் இதை எனக்கு நினைவு படுத்தினார். சிறுவயதில் நான் எனது பிள்ளைகளுக்காக குஜராத்தின் பிரபலமான சிற்றுண்டியான'கண்ட்வி'யைச் செய்து கொடுத்திருக்கிறேன்.
எனது மாமியாரும். முன்னாள் பிரதமருமான இந்திரா காந்திக்குச் சமைக்கத் தெரியாது என்றாலும், உணவின் சுவையைத் துல்லியமாக அறியும் திறன் அவருக்கு இருந்தது. ஒரு உணவில் என்ன குறைகிறது. அதன் சுவையை மேம்படுத்த எதைச் சேர்க்க வேண்டும் என்பதை இந்திரா காந்தி சரியாகக் கூறிவிடுவார்.
உணவு எனது வாழ்க்கையில் எப்போதுமே முக்கியப் பங்கு வகித்துள்ளது. ராஜீவ் காந்தியை முதல்முறை சந் தித்ததும் கூட நல்ல உணவைத் தேடிச் சென்றபோது தான். ஆரம்பத்தில் இந்திய உணவு வகைகளின் பன்முகத்தன்மை வியப்பை அளித்தாலும்,காரமும் மசாலாவும் அச்சத்தை ஏற்படுத்தின.
ஆனால், காலப்போக்கில் இந்திய உணவுகள் எனது வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டது. இப்போது பருப்பு சாதம் தான் எனது வீட்டின் சுவையாகமாறிவிட்டது இவ்வாறு சோனியா தனது நினைவுக் குறிப்பு புத்தகத்தில் கூறியுள்ளார்.