என் கணவர் மறுமணம் செய்ய வேண்டும்... புனேவில் 6 வயது மகனுடன் மனைவி தற்கொலை

போலீசார் அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது, அங்கு அவர் எழுதி வைத்திருந்த பல பக்கங்கள் கொண்ட உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
என் கணவர் மறுமணம் செய்ய வேண்டும்... புனேவில் 6 வயது மகனுடன் மனைவி தற்கொலை
Published on: 

புனே,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள பிம்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் 18-வது மாடியில் ஒரு தம்பதியினர் தங்களது 6 வயது மகனுடன் வசித்து வந்தனர்.

பரிதாப உயிரிழப்பு

நேற்று இந்த குடியிருப்பு பகுதியில் திடீரென பெரும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் ஒரு பெண்ணும், சிறுவனும் உயிரிழந்து கிடப்பதை கண்டு உறைந்து போயினர்.

போலீசாருக்கு தகவல்

விசாரணையில், அவர்கள் அந்த குடியிருப்பின் 18-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தாயும், மகனும் என்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சோதனை

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், அந்த பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறுக்கமான கடிதம்

தொடர்ந்து போலீசார் அந்தப் பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது, அங்கு அவர் எழுதி வைத்திருந்த பல பக்கங்கள் கொண்ட உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அந்த மரணக் குறிப்பைப் படித்த காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கணவர் மற்றொரு திருமணம்

அதில், "நான் பல ஆண்டுகளாக முதுகுத் தண்டுவடம் தொடர்பான கடுமையான நோயால் அவதிப்பட்டு வந்தேன். பல்வேறு சிகிச்சைகள் பெற்றும் நோயின் பிடியில் இருந்து மீள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட கடுமையான விரக்தியிலேயே நான் இந்த முடிவை எடுக்கிறேன். எனது மரணத்திற்கு பிறகு எனது கணவர் மற்றொரு திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்" என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

தீராத நோய்

தீராத நோய் பாதிப்பால் பெற்ற மகனையே 18-வது மாடியில் இருந்து கீழே தள்ளி, தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்ட இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X