நாளை விசாரணைக்கு ஆஜராவார், என் மகன் நிரபராதி: மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா

உத்தரபிரதேசத்தின் லகிம்பூரில் கடந்த 3-ந்தேதி நடந்த விவசாயிகள் போராட்டம் மற்றும் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நாளை விசாரணைக்கு ஆஜராவார், என் மகன் நிரபராதி: மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா
Published on

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் மீண்டும் அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்தநிலையில் தனது மகன் நிரபராதி என அஜய் மிஸ்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக லக்னோ விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் சட்டத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். என் மகன் நிரபராதி. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த வியாழக்கிழமை அவருக்கு நோட்டீஸ் வந்தது. ஆனால் அன்று உடல்நலக்குறைவு காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை. நாளை அவர் போலீசார் முன் ஆஜராகி வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களை வழங்குவார் என தெரிவித்தார்.

பா.ஜனதா அரசு பாகுபாடு பாராமல் செயல்பட்டு வருவதாகவும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com