இமாச்சல பிரதேசத்தில் வயல்வெளியில் கிடந்த மர்ம பலூன்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட விமானம் போன்ற ஒரு மர்ம பலூன் கண்டுபிடிக்கப்பட்டது.
இமாச்சல பிரதேசத்தில் வயல்வெளியில் கிடந்த மர்ம பலூன்
Published on

சிம்லா,

இமாச்சலப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் அருகே பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் என்ற வாசகம் எழுதப்பட்ட விமான வடிவிலான சந்தேகத்திற்குரிய பலூன் வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உள்ளூர்வாசி ராஜ்குமார் கூறுகையில்,

பலோஹ் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், இன்று காலை இந்த சந்தேகத்திற்கிடமான பலூனைப் பார்த்துள்ளனர்.

பின்னர் அவர்கள் உடனடியாக தலாய் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பலூனைப் பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்து சென்றனர்.

மற்றொரு உள்ளூர்வாசியான ராஜேஷ் கௌதம், அந்த பொருள் விமான வடிவிலான பலூன் என்றும் அதில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் என்ற வார்த்தைகள் தெளிவாகத் தெரிந்ததாகவும் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com