புதுச்சேரி தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது

புதுச்சேரி தலைமை செயலக வளாகம், அலுவலகங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
Published on

புதுச்சேரி

புதுச்சேரி தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து கோரிமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள்

இதில், புதுச்சேரி தலைமை செயலக வளாகம், அலுவலகங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினரும் வந்து சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த சேஷஷைலாஷன் (வயது 40) என்பவரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com