முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மைசூரு தசரா உயர்நிலை குழு கூட்டம்

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மைசூரு தசரா உயர்நிலை குழு கூட்டம் பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மைசூரு தசரா உயர்நிலை குழு கூட்டம்
Published on

பெங்களூரு:-

தசரா கொண்டாட்டம்

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்ததால், தசரா கொண்டாட்டம் சாதாரணமாக நடந்தது. இந்த முறை கொரோனா பரவல் இல்லை. தற்போது மைசூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதி

களில் நல்ல மழை பெய்துள்ளது. மைசூரு மண்டலத்தில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து வருகிற அக்டோபர் மாதம் தசரா பண்டிகையை ஆடம்பரமாக கொண்டாட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஆலோசிக்க மைசூரு தசரா உயர்நிலை குழு கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதில் மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரிகள், அந்த 2 மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கூடுதல் நிதி கிடைக்கும்

இந்த கூட்டத்தில் மைசூரு தசரா விழாவை எவ்வாறு கொண்டாடுவது, தசரா பண்டிகை கொண்டாட்டத்தை தொடங்கி வைக்க யாரை அழைப்பது, என்னென்ன கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவது, விழாவை காண வருகை தரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க எந்த மாதிரியான சுற்றுலா திட்டங்களை அறிமுகம் செய்வது என்பது குறித்து விரிவாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதற்கான நிதி தேவை, மைசூருவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முதல்-மந்திரி சித்தராமையாவின் சொந்த மாவட்ட நிகழ்ச்சி என்பதால் இந்த முறை இந்த விழாவுக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com