மைசூரு கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் 5 பேர் கைது

கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக உள்துறை மந்திரி அரகா ஞானேந்திரா இன்று தெரிவித்தார்.
மைசூரு கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் 5 பேர் கைது
Published on

மைசூரு

கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா பகுதியில், கடந்த 24-ந்தேதி இரவு 8 மணி அளவில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த 23 வயதான எம்பிஏ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனும் பயங்கரமாக தாக்கப்பட்டார். இந்த கூட்டு பலாத்கார சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. பிரதாப் ரெட்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாமுண்டி மலை அடிவாரத்தில் மதுபானம் அருந்திய மர்மநபர்களே இந்த கற்பழிப்பு சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஆலனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்த வழக்கு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக உள்துறை மந்திரி அரகா ஞானேந்திரா இன்று தெரிவித்தார். டிஜிபி பிரவீன் சூட் விரைவில் நிருபர்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com