நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்: திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேச்சு

நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி எஸ்.பி. வருண்குமார் கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்: திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேச்சு
Published on

சண்டிகர்,

சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளின் 5-வது மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியதாவது:-

நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். நாதகவினால் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

நாம் தமிழர் கட்சி குறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சைபர் கிரம், இணையதள குற்றங்கள், மிரட்டல்களை கண்காணிப்பது, அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விரிவான விளக்கத்தை திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஆதாரங்களோடு விளக்கி பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com