நாகாலாந்து தேர்தல் கலவரம் ஒருவர் பலி; 1 மணி நிலவரப்படி 56 % வாக்குப்பதிவு

நாகாலாந்து தேர்தலில் ஒருமணி நேர நிலவரப்படி 56 % வாக்குப்பதிவாகி இருந்தது. அகுலுடோ வாக்குச்சாவடியில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
நாகாலாந்து தேர்தல் கலவரம் ஒருவர் பலி; 1 மணி நிலவரப்படி 56 % வாக்குப்பதிவு
Published on

கோஹிமா

நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

மொத்தம் 60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு 59 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர்கள் இன்று காலையில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஓட்டுப் பதிவு தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு மோன் மாவட்டத்தில் திஜித் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் யான்லன் என்ற கிராம கவுன்சில் உறுப்பினர் ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

முதல் 2 மணிநேரத்தில் நடந்த வாக்கு பதிவில் 17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தகவல் வெளியாகியது. மதியம் 1 மணி நேர நிலவரப்படி 56 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

நாகாலாந்து மாநிலம் அகுலுடோ வாக்குச்சாவடியில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com