‘ஸ்கைப்’ மூலமாக அறிக்கையளிக்க தயார்! அமலாக்கப்பிரிவுக்கு ஜாகிர் நாயக் பதில்

இன்டர்நெட் வசதியின் மூலமாக அறிக்கையளிக்க தயார் என அமலாக்கப்பிரிவுக்கு சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் பதிலளித்து உள்ளார்.
‘ஸ்கைப்’ மூலமாக அறிக்கையளிக்க தயார்! அமலாக்கப்பிரிவுக்கு ஜாகிர் நாயக் பதில்
Published on

மும்பை,

பணமோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு பதிலளித்து உள்ள ஜாகிர் நாயக், எலக்டிரானிக் மீடியா வாயிலாக பதிலளிக்க தயார் என கூறிஉள்ளார். ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்தின் வழக்கறிஞர் மகேஷ் முலே மூலம் வழங்கப்பட்டு உள்ள பதிலில் உங்களுடைய (அமலாக்கப்பிரிவு) விசாரணைக்கு உதவும் வழியாக ஸ்கைப் அல்லது வேறு ஏதாவது எலிக்டிரானிக் மீடியாவின் வழியாக அறிக்கையினை வழங்க எனது கட்சிக்காரர் தயாராக உள்ளார், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஜாகிர் நாயக், நான் ஒரு என்ஆர்ஐ, சம்மன்கள் எதுவும் நான் பெறவில்லை. இருப்பினும் தன்னுடைய சகோதரர் சம்மன்களை கடந்த 2-ம் தேதி பெற்று உள்ளார், அதில் அமலாக்கப்பிரிவினர் முன்னதாக பிப்ரவரி 9-ம் தேதி ஆஜராக வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. எனக்கு அனுப்பட்ட சம்மன்கள் முறையாக வரவில்லை என்றும் கூறிஉள்ளார். சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாகிர் நாயக்கின் அறக்கட்டளைக்கு மத்திய அரசு தடை விதித்தது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

இளைஞர்களை ஐஎஸ் தீவிரவாதத்தில் இணைய இந்த அமைப்பு உதவிபுரிவதாக மத்திய அரசு தடைக்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஜாகிர் நாயக் தனது மத போதனைகளில் பல்வேறு மதப்பிரிவினர்களிடையே கசப்புணர்வையும், வெறுப்புணர்வையும் பரப்புவதாகவும் விசாரணை அறிவிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும்வரையில் அமலாக்கப்பிரிவு காத்திருக்கவும் அமலாக்கப்பிரிவிடம் ஜாகிர் நாயக் கோரிக்கை விடுத்து உள்ளார்.

ஜாகிர் நாயக் தரப்பில் அமலாக்கப்பிரிவினர் முன்னதாக நேரில் ஆஜராக சில மாதங்கள் அவகாசம் கோரப்பட்டு உள்ளது. கடந்த வாரம் பணமோசடி வழங்கி ஜாகிர் நாயக்கின் உதவியாளர் அமீர் காஸ்தாரை அமலாக்கப்பிரிவினர் கைது செய்தனர். மத்திய விசாரணை முகமை கடந்த டிசம்பர் மாதம் ஜாகிர் நாயக் மற்றும் பிறரது மீது கிரிமினல் வழக்கை பதிவுசெய்தது. அமலாக்கப்பிரிவு குற்றச்செயலுக்கு சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com