புதுச்சேரி சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக நமச்சிவாயம் தேர்வு

சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரி சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக நமச்சிவாயம் தேர்வு
Published on

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைகிறது. முதல்-அமைச்சராக ரங்கசாமி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மத்திய மந்திரி கிஷண்ரெட்டி, மாநில பா.ஜ.க. பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, நிர்மல்குமார் சுரானா, தேர்தல் பொறுப்பாளர் ராஜீவ்சந்திரசேகர் எம்.பி., மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணன், ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக் (சுயேச்சை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டார். இதனை மத்திய உள்துறை இணை மந்திரி கிஷண்ரெட்டி தெரிவித்தார். இதையடுத்து நமச்சிவாயத்துக்கு பா.ஜ.க. முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com