

புதுடெல்லி,
மதிப்பெண் பட்டியலில் பெயர் மாற்றம் கோரும் விவகாரத்தில் சி.பி.எஸ்.இ.யின் விதிகளை எதிர்த்து ஜிக்யா யாதவ் உள்ளிட்ட 22 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த அமர்வு நேற்று கூறிய தீர்ப்பில், பெரும்பாலான மாணவர்கள் இளம் வயது, போதிய புரிதல் இல்லாமையாலும், மதிப்பெண் சான்றிதழ்களில் தவறுகளை கவனிக்காமல் விட வாய்ப்புள்ளது. இதற்கு தீர்வு காண, சி.பி.எஸ்.இ. விதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். மதிப்பெண் பட்டியலில் பெயர் மாற்றம் கோரிய விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தது.