மிஸ் இந்தியா அழகியாக கிரீடம் சூடிய நந்தினி குப்தா

2023-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகியாக ராஜஸ்தானை சேர்ந்த நந்தினி குப்தா என்பவர் கிரீடம் சூடியுள்ளார்.
மிஸ் இந்தியா அழகியாக கிரீடம் சூடிய நந்தினி குப்தா
Published on

இம்பால்,

2023-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகி போட்டி மணிப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில், ராஜஸ்தானின் கோடா நகரை சேர்ந்த நந்தினி குப்தா (வயது 19) என்பவருக்கு முதல் இடம் கிடைத்தது.

அழகி போட்டியில் 2-வது இடம் டெல்லியை சேர்ந்த ஷ்ரேயா பூஞ்சா என்பவருக்கும், 3-வது இடம் மணிப்பூரை சேர்ந்த தவுநாவ்ஜாம் ஸ்டிரெலா லுவாங் என்பவருக்கும் கிடைத்து உள்ளது.

அவர்களுக்கு போட்டியை நடத்திய பெமினா மிஸ் இந்தியா அமைப்பு தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டது. போட்டியில் வெற்றி பெற்ற நந்தினி வர்த்தக மேலாண்மை பட்டப்படிப்பை படித்துள்ளார்.

இந்த போட்டியில் பார்வையாளர்களை மகிழ்விக்க, பாலிவுட் நடிகர், நடிகையரான கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டேவின் நடன நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், மணீஷ் பால் மற்றும் நடிகை பூமி பட்னாகர் நடத்திய நிகழ்ச்சியும் ரசிகர்களை பரவலாக கவர்ந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com