நடிகை தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்

நடிகை தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகை தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்
Published on

மும்பை,

பிரபல இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்கிற்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக்காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான ரியா உள்ளிட்டவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பிரபல தமிழ் நடிகை ரகுல்பிரீத் சிங், இந்தி நடிகை சாராஅலிகான், தீபிகா படுகோன் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் விடுத்துள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com