டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 2 பயணிகள் கைது

சுமார் 10.5 கிலோ 'ஹைட்ரோபோனிக்' கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 2 பயணிகள் கைது
Published on

புதுடெல்லி,

தாய்லாந்து நாட்டில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் 2 பேரிடம் இருந்து சுமார் 10.5 கிலோ எடை கொண்ட, ரூ.10 கோடி மதிப்பிலான 'ஹைட்ரோபோனிக்' வகை கஞ்சா (hydroponic weed) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி விமான நிலையம்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தாய்லாந்து நாட்டின் புக்கெட் விமான நிலையத்தில் இருந்து வந்த விமான பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

'ஹைட்ரோபோனிக்' கஞ்சா

அப்போது அதில் சுமார் 10.5 கிலோ 'ஹைட்ரோபோனிக்' கஞ்சா கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 'ஹைட்ரோபோனிக்' கஞ்சா என்பது மண்ணுக்கு பதிலாக சத்து நிறைந்த நீரில் வளர்க்கப்படும், அதிக வீரியம் கொண்ட ஒரு வகை கஞ்சா ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த 2 பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com