மோடி அரசாங்கம் விளம்பரங்களில் மட்டுமே உள்ளது - தீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி!

மோடி அரசாங்கம் விளம்பரங்களில் மட்டுமே உள்ளது, நாட்டில் அரசாங்கம் இல்லை என மத்திய பாஜக அரசை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்தார்.
மோடி அரசாங்கம் விளம்பரங்களில் மட்டுமே உள்ளது - தீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி!
Published on

சண்டிகர்,

மோடி அரசாங்கம் விளம்பரங்களில் மட்டுமே உள்ளது, நாட்டில் அரசாங்கம் இல்லை என மத்திய பாஜக அரசை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்தார்.

இன்று பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் தேர்தல் பேரணியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில்,

ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக மத உணர்வுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

மோடி அரசாங்கம் விளம்பரங்களில் மட்டுமே உள்ளது, நாட்டில் அரசாங்க இல்லை. அப்படி அரசாங்கம் இருந்திருந்தால் நாட்டில் வேலைவாய்ப்பு இருந்திருக்கும் மற்றும் விலை ஏற்றம் நடந்திருக்காது. மேலும், நாட்டில் அரசாங்கம் இருந்திருந்தால் வேலைவாய்ப்பை அளிக்கும் பொது நிறுவனங்கள் மோடியுடைய நண்பர்களுக்கு விற்று இருக்கப்பட மாட்டாது.

மோடி அரசு விளம்பரத்துக்காக ரூ.2000 கோடி தொகை செலவிட்டுள்ளது.

பஞ்சாப்பை பற்றி பேசுபவர்களில் ஒருவர் ஏற்கெனவே தன்னுடைய கோடீஸ்வர நண்பர்கள் முன் தலை வணங்கி நிற்கிறார். இன்னொருவரான அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலுக்காகவும் அதிகாரத்திற்காகவும் யார் முன் வேண்டுமானாலும் தலை வணங்குவார். இதுவே உண்மையாகும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com