இந்திய வீரர் நாளை விண்வெளி பயணம்: நாசா அறிவிப்பு


இந்திய வீரர் நாளை விண்வெளி பயணம்: நாசா அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2025 9:16 AM IST (Updated: 24 Jun 2025 11:48 AM IST)
t-max-icont-min-icon

மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு காரணமாக விண்வெளி பயணம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம் -4' மனித விண்வெளி பயணத்திற்கான 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது.

இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் செல்ல இருந்தனர். பலமுறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த 22-ம் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக நாசா அறிவித்தது.

இந்தநிலையில், ஆக்சியம் 4 திட்டம் நாளை (ஜூன் 25) செயல்படுத்தப்படும் என நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நாளை (ஜூன்25) இந்திய நேரப்படி பிற்பகல் 12.01 மணிக்கு விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர். புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் செல்கின்றனர். மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு காரணமாக விண்வெளி பயணம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

1 More update

Next Story