அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம் - சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம் என சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம் - சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
Published on

புதுடெல்லி,

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி.) தயார் செய்தது. கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் அசாம் மக்கள் தொகையில் 19 லட்சம் பேர் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கண்காணிக்கும் அமர்வின் தலைவருமான ரஞ்சன் கோகாய் குடிமக்கள் பதிவு அவசியம் என்று கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தேசிய குடிமக்கள் பதிவேடு வருங்காலத்திற்கான ஒரு அடிப்படை ஆவணம். சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையை அறிய வேண்டியது அவசியம். குடிமக்கள் பதிவு நடத்துவது புதிய நடைமுறை அல்ல. ஏற்கனவே 1951-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் புதுப்பிப்பு தான் இது. இதன்மூலமாக சட்டவிரோதமாக குடியேறியவர்களால் ஏற்படும் கலவரம், வன்முறைகளை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com