தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு ஊழலின் மையமாக உள்ளது - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு ஊழலின் மையமாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு ஊழலின் மையமாக உள்ளது. அது, மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு அங்கம். ஆனால், தனது பணிகளை தனியார் வியாபாரிகளிடம் ஒப்படைத்து செயல்படுகிறது. தேசிய தேர்வு முகமை மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குத் தலைமை தாங்கிய ஒருவரின் தலைமையில் உள்ளது, இது மெகா மோசடிகளைக் கண்டுள்ளது.

மத்திய கல்வித்துறை இணை மந்திரி மாநிலங்களவையில் அளித்த பதிலில், தேசிய தேர்வு முகமை ரூ.3,512.98 கோடி வசூலித்ததாகவும், அதே சமயம் தேர்வுகளை நடத்துவதற்காக ரூ.3,064.77 கோடி செலவழித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் கடந்த 6 ஆண்டுகளில் தேசிய தேர்வு முகமை ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டி இருப்பது தெரிகிறது.

ஆனால் இந்த லாபத்தை தேசிய தேர்வு முகமை, தானாகவே தேர்வு நடத்தும் அளவுக்கு அதன் திறமையை மேம்படுத்த பயன்படுத்தவில்லை. எனவே, மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக மோடி அரசு சீரழித்து இருப்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com