நீருக்கடியில் 60 மீட்டர் நீளத்திற்கு தேசியக்கொடி: அந்தமானில் கின்னஸ் சாதனை

சுவராஜ் தீவு பகுதியில் ‘மிக உயரமான மனித கோபுரம்’ அமைக்கும் மற்றொரு கின்னஸ் சாதனை முயற்சியும் நாளை நடைபெற உள்ளது.
நீருக்கடியில்  60 மீட்டர் நீளத்திற்கு தேசியக்கொடி: அந்தமானில் கின்னஸ் சாதனை
Published on

கடலுக்கடியில் தேசியக் கொடியை விரித்து புதிய கின்னஸ் உலக சாதனைகள் சாதனை அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் நிகழ்த்தப்பட்டுள்ளது. அந்தமானில் உள்ள ராதாநகர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், சுமார் 60 மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்ட முவர்ணக்கொடி கடலுக்கடியில் விரிக்கப்பட்டது.

பல்வேறு துறைகள் மற்றும் பயிற்சி பெற்ற நீர்மூழ்கி வீரர்களின் ஒருங்கிணைப்புடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.சுவராஜ் தீவு பகுதியில் நடைபெற்ற நிகழ்வை துணை நிலை ஆளுநர் டி. கே. ஜோஷி, தலைமைச் செயலாளர் சந்திர பூஷண் குமார், காவல் துறை தலைமை இயக்குநர் எச். எஸ். தாலிவால் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல்துறை, வனத்துறை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் பல்வேறு டைவிங் மையங்களைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தினர்.

காலை 10.35 மணியளவில், கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நடுவர் ரிஷி நாத் இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி, சான்றிதழை வழங்கினார். சுவராஜ் தீவு பகுதியில் ‘மிக உயரமான மனித கோபுரம்’ அமைக்கும் மற்றொரு கின்னஸ் சாதனை முயற்சியும் நாளை நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com