தேசிய பெண் குழந்தைகள் தினம்- தலைவர்கள் வாழ்த்து!

தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

டெல்லி,

தேசிய பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, மத்திய மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் பிரமர் மோடி, பெண்கள் மேம்பாடு பற்றிய சிந்தனையை பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான தீர்மானமாக மாற்றி வாய்ப்புகளின் கதவுகளைத் திறந்தார். இன்று நாட்டின் மகள்கள் ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் பெயரை ஒளிரச் செய்கிறார்கள். 'தேசிய பெண் குழந்தைகள் தினத்தில்', நாட்டு பெருமைக்குரிய இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

நிதின் கட்கரி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் உறுதியுடனும், திறமையுடனும், லட்சியத்துடனும் நாட்டின் மகள்கள் இன்று ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தலைமையிலான எங்கள் அரசாங்கம் 'பெண்கள் தலைமையிலான மேம்பாட்டிற்காக' தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், நாளைய பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக உறுதியளிப்போம், மேலும் அனைத்து உயரங்களையும் அடையும் சக்தியை அவர்களுக்கு வழங்குவோம் என பதிவிடபட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com