தேசிய கைத்தறி தினம்: 22 கைவினை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனாதிபதி திரௌபதி முர்மு, 22 சிறந்த கைவினை கலைஞர்களுக்கு 'சந்த் கபீர்' மற்றும் 'தேசிய கைத்தறி' விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
தேசிய கைத்தறி தினம்: 22 கைவினை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான நெசவு மரபுகளையும், அவற்றை அழியாமல் பாதுகாத்து வரும் கைவினை கலைஞர்களையும் சிறப்பிக்கும் வகையில், தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு 22 சிறந்த நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு 'சந்த் கபீர் கைத்தறி விருதுகள்' மற்றும் 'தேசிய கைத்தறி விருதுகள்' ஆகியவற்றை இன்று வழங்கினார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் இந்த விழா நடைபெற்றது.

இந்தியாவின் செழுமையான கைத்தறி பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சிறப்பான கைத்திறன், புதுமை மற்றும் பங்களிப்பை வெளிப்படுத்தியதற்காக இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் ஜம்தானி, குஜராத்தின் தங்கலியா நெசவு மற்றும் சிக்கிமின் லெப்சா ஜவுளி என நாட்டின் பல்வேறு வகையான நெசவு மரபுகளை பிரதிபலிக்கும் கலைஞர்கள் இவ்விருதுகளைப் பெற்றுள்ளனர்.

கைத்தறித் துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் மதிப்புமிக்க 'சந்த் கபீர் கைத்தறி விருதுகள்' மூன்று கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன. 'விசித்ரபார் காதி' (Bichitpar Khadi) புடவையை நெய்த ஒடிசாவைச் சேர்ந்த ராம் மெஹர், 'முகா பட்டு' (Muga Silk) புடவையை நெய்த அசாமின் ருனிமா சேதியா சவுத்ரி, அரிய வகை 'ஜர்பாப் ஷேவதம்பரி அவத் ஜம்தானி' (Zarbaft Shewatambari Awadh Jamdhani) புடவையை நெய்த உத்தர பிரதேசத்தின் ஷா முகமது அன்சாரி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com