நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி கோர்ட்டு மறுப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக 2-ந் தேதிக்கு நீதிபதி விஷால் கோக்னே ஒத்திவைத்தார்.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எதிராக டெல்லி தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.அந்த வழக்கு, தனி நீதிபதி விஷால் கோக்னே முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்வதற்கு முன்பு, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரின் கருத்துகளை அறிய அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால், நீதிபதி அதை ஏற்கவில்லை. இந்த வழக்கை 2-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story






