தேசிய கல்வி நிறுவன தரவரிசை; 85.31 புள்ளிகளுடன் சென்னை ஐ.ஐ.டி. மீண்டும் முதலிடம்

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து முதலிடத்தினை தக்க வைத்து கொண்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவன தரவரிசை; 85.31 புள்ளிகளுடன் சென்னை ஐ.ஐ.டி. மீண்டும் முதலிடம்
Published on

புதுடெல்லி,

நாட்டில் தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்தியாவிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் 85.31 புள்ளிகளுடன் சென்னை ஐ.ஐ.டி. மீண்டும் முதலிடம் பிடித்து அதனை தக்க வைத்து கொண்டுள்ளது. ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு 2வது இடமும், டெல்லி ஐ.ஐ.டி. 3வது இடமும் பிடித்துள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறுவதற்காக மொத்தம் 5 ஆயிரத்து 805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலில் பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி. முதலிடம் பிடித்துள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் 2வது இடமும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 3வது இடமும் பிடித்துள்ளன.

இதேபோன்று நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 12வது இடம் பெற்றுள்ளது. பொறியியல் கல்வி நிறுவனங்களில் இது 14வது இடமும், ஒட்டு மொத்த தரவரிசையில் 20வது இடமும் பிடித்து உள்ளது. பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலைக்கான கல்வி, முதல் 20 கல்வி நிறுவனங்களில் 18வது இடம் பிடித்து உள்ளது.

எனினும், மெட்ராஸ் பல்கலைக்கழகம் இந்த பட்டியலில் 41வது இடம் பிடித்து உள்ளது. தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு சார்ந்த மொத்தம் 16 பல்கலைக்கழகங்கள் டாப் 100 கல்வி நிறுவனங்களின் வரிசையில் இடம் பிடித்து உள்ளன.

சிறந்த மருத்துவ கல்லூரிகளில் முதன்முறையாக சென்னை மருத்துவ கல்லூரி இடம் பிடித்து உள்ளது. அந்த கல்லூரிக்கு 12வது இடம் கிடைத்து உள்ளது. கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி நாட்டில் சிறந்த கல்லூரி வரிசையில் 3வது இடத்தில் உள்ளது.

இதேபோன்று சென்னையிலுள்ள பிரெசிடென்சி மற்றும் லயோலா கல்லூரி ஆகியவை டாப் 10 கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளன. எனினும் பிரெசிடென்சி கல்லூரி இந்த ஆண்டு 3வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு சென்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com