தேசிய ஒற்றுமை தினம்: சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
தேசிய ஒற்றுமை தினம்: சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
Published on

அகமதாபாத்,

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார்.

இந்தியாவுடன் கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இணைய வைத்தவர். அவரது 147-வது பிறந்த தினமான இன்று, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், படேலின் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கெவாடியாவில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். கெவாடியாவில் நடைபெற்று வரும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com