

புதுடெல்லி,
இப்ராகீம் நபிகள் வாழ்வில் செய்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பக்ரீத் பண்டிகை தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், சக குடிமக்கள் அனைவருக்கும் ஈத் முபாரக். ஈத்-உஸ்-ஜுஹா என்பது அன்பு மற்றும் தியாகத்தின் உணர்வை வெளிப்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் ஒரு திருவிழா ஆகும். கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் செயல்படுவோம் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.